அவ்வளவு பெரிய குத்தமாங்க?

*என் வீட்டு 
தொலைக்காட்சி 
"கேபிள்" துண்டிக்கப்பட்டு 
தூசியுடன் 
காட்சி அளிக்கிறது..


*உறவினர் எவரது 
விசேஷங்களுக்கும் 
ஆறு மாதமாக 
செல்வதில்லை
என் பெற்றோர் !
சென்றாலும் 
பத்து நிமிடங்களுக்கு மேல் 
இருப்பது மில்லை!


*என் வகுப்பை 
சொல்லக் கேட்ட 
அடுத்த நிமிடமே 
அறிவுரைகளை 
வாரி வழங்குவது
வாடிக்கை ஆகி விட்டது
விருந்தாளிகளுக்கு!

*தெரிந்த - அறிந்த 
பலரும் எனக்காக 
பிரார்த்தனை பண்ணுவதாக
சொல்கிறார்கள்!

"என்ன செய்யப் போறாளோ?"
எப்போதும் எல்லோரிடமும் 
புலம்பியபடியே இருக்கிறாள்
அம்மா!


*போர் மேகம் சூழ்ந்த 
நாட்டின் எல்லைப் பகுதியை
தேர்வு மேகம் சூழ்ந்தபடி 
"திக்..திக்" கென
எனது வீடு!

  நான்
"பிளஸ் 2" படிக்கிறது
 அவ்வளவு பெரிய குத்தமாங்க?


by m.stalin saravanan,karamkkudi
courtesty RANI tamil magazine











===================================================
Oru Chinna comparison...



An old  tamil cinema song: 
ஊரும உறவும் அறியும் வரையில் 
கண்கள் மட்டோடு...
மணமாலை சூடும் நாளில் 

கைகள் தொட்டாடு....
இது அந்தக்காலம்


A new tamil cinema song: 
டாடி மம்மி வீட்டில் இல்லே ....
தடை போட யாரும் இல்லே...
விளையாடப் போவோமடா வில்லாளா...
இது இந்தக்காலம்..

இது எப்படி இருக்கு.....

Thanks to Vijayendran Gopalakrishnan BSNL